அதிகாலையில் பா.ஜ.க-விற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சோகத்தில் மூழ்கிய பாஜகவினர்!
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92) உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார். சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வந்துள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன் சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இவர் தமிழக பாஜக தலைவராக 2 முறையும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 92 வயதான கே.என். லட்சுமணன் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் வீட்டிலிருந்த கே.என். லட்சுமணன் திடீரென காலமானார். அவரது மறைவிற்கு பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.