எச்சரிக்கை: Gpay மூலம் ரூ.49,000 பணத்தை இழந்த பாஜக பிரபலம்.. மின்கட்டணம் செலுத்தியதில் மோசடி..!!

எச்சரிக்கை: Gpay மூலம் ரூ.49,000 பணத்தை இழந்த பாஜக பிரபலம்.. மின்கட்டணம் செலுத்தியதில் மோசடி..!!


tamilnadu alisha abdhullah current  bill scam

சமீபகாலமாகவே கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளில் மோசடி நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க அரசும் பல்வேறு  வழிமுறைகளை செய்து வருகிறது. இருப்பினும் நாட்டின் பல இடங்களில் மோசடி நிகழ்வது தொடர்கதையாக இருக்கிறது. 

இந்த நிலையில், பாஜக உறுப்பினர் அலிஷா அப்துல்லா பணம் கட்டி ஏமாந்த விஷயம் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அதிகமாக வணிக மின்கட்டணம் செலுத்தி நான் ஏமாந்து விட்டேன் கடந்த மாதம் ரூ.22,583 என்று பில் தொகை வந்துள்ள நிலையில், நான் கூகுள் பே மூலமாக ரூ.49,583 கட்டி ஏமாந்திருக்கிறேன். மக்களே கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.