வேளாண் பட்ஜெட் 2023 - 24: தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது - அமைச்சர் வேளாண் பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு.!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவையில் அவர் பேசியவை பின்வருமாறு,
எத்தனை தொழில்கள் செழித்து வளர்தலும் மனிதனின் அடிப்படை தேவை உணவு. விலை நிலங்கள் பரப்புகள் குறைந்து வருகிறது. இயற்கையோடு ஆடக்கூடிய கண்ணாமூச்சி ஆட்டமாக விவசாயம் இன்றளவில் மாறிவிட்டது.
விளைநிலங்கள் குறைந்து வருகிறது என்பதால் அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். புன்செய் நிலங்களும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவு 1.93 இலட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. ஆறு - ஏரிகளை தூர்வாரியதால் தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.