
tamilnadu - namakkal - sbi atm block money
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிபவர் மூர்த்தி. இவர் நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூபாய் 40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அவை அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகளாக வெளிவந்துள்ளது. அதில் வெளிவந்த ஐந்து நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி அருகில் இருந்த எஸ்பிஐ வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத வங்கி நிர்வாகம் அவரது பெயர் மற்றும் முகவரியை வாங்கிக்கொண்டு நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பியுள்ளது.
அவர் எவ்வளவு முயன்றும் பணத்தை மாற்றிக் கொடுக்க வங்கி நிர்வாகம் முன் வரவில்லை. மூர்த்தியும் அதனை மாற்றாமல் விடுவதாக இல்லை. தொடர்ந்து வங்கிக்கு முன்சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த போலீசார் அங்கு வந்து அவரை வங்கிக்கு அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
போலீசார் மூர்த்திக்கு ஆதரவாக பேசிய நிலையில் ஒரு வழியாக வங்கி நிர்வாகம் கள்ள நோட்டுகளை மாற்றி கொடுத்துள்ளது. ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டுகள் எப்படி வந்தது? மேலும், மாற்றிக் கொடுக்க மறுத்த வங்கி நிர்வாகம் போன்றவற்றால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Advertisement
Advertisement