பணியிடை நீக்க எண்ணிக்கை உயர்வு; குவியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள்.

பணியிடை நீக்க எண்ணிக்கை உயர்வு; குவியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள்.


tamilnadu---jacto-jio---government-stafs---strike-DQYSFT

மாநிலம் முழுவதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்வானது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

கடந்த 22ம் தேதி முதல் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளால் மாநிலம் முழுவதும் இதுவரை 420 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

jacto geo

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 28ம் தேதிக்குள் பணிக்கு திரும்பலாம் அவர்களின் மேல் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது ஆனால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது .

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெற பட்டதாரி ஆசிரியர்கள் குவிந்து வருகின்றனர். அவர்களின் கல்வித் தகுதி மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.