தமிழகம்

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் 7500 இல்லையாம்; அதற்கும் அதிகமாக கொடுக்க அரசு முடிவு

Summary:

tamilnadu - jacto jio - government stafs - strike

7500 ஆக இருந்த தொகுப்பூதியத்தை 10000 ஆக உயர்த்தி ததற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது. இந்த அதிரடி முடிவினை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ஜாக்டோ ஜியோ அமைப்பு என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

Image result for ஜாக்டோ ஜியோ அரசு பணியாளர்கள் போராட்டம்

ஆனால் இந்த உத்தரவை மீறி தொடர் போராட்டத்தில் ஈடு படப்போவதாக தெரிகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பொதுத்தோ்வுகள் நெருங்கி வருவதால் ஆசிாியா்களின் போராட்டமானது மாணவா்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே அவா்களுக்கு பதிலாக ரூ.7,500 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிாியா்களை நியமிப்பது என்று நேற்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 7500 ல் இருந்து 10000 ஆக தொகுப்பூதியத்தை உயர்த்த தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement