மார்னிங் மகிழ்ச்சி செய்தி! அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை....! இன்று வெளியாகும் இரட்டிப்பு இன்பச் செய்தி!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், அரசின் பொங்கல் பரிசு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய இடம் பிடித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்த சமீபத்திய தகவல்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்பத்தில் வெளியான அறிவிப்பில், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மட்டும் தகவல் வெளியிடப்பட்டு, ரொக்கப் பணம் குறித்து எந்த குறிப்பிடும் இல்லாததால் மக்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவியது.
முதல்வர் தலைமையில் ஆலோசனை
இந்த சூழலில், பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, பொங்கல் பரிசுடன் 3000 ரூபாய் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு..! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
3000 ரூபாய் ரொக்கம் – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த முடிவின் அடிப்படையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்க உதவி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தை வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க உதவி வழங்கும் இந்த திட்டம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதோடு, பண்டிகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் காலத்தை முன்னிட்டு, அரசின் இந்த முடிவு அரசியல் மற்றும் சமூக ரீதியாகவும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இன்பச் செய்தி! ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு! ஜனவரி முதல் வாரத்தில்... வெளியான தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம்!