மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் பரிசு! ரேஷன் கார்டுக்கு ரூ.2,000.....! முதல்வர் ஸ்டாலினின் அதிரடி!



tamil-nadu-pongal-gift-2000-ration-card-news

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு பரிசுத் திட்டங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய்?

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நிதித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஏற்பாடு

வழக்கம் போல இந்த ஆண்டும் பச்சரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் முயற்சியும் பரிசீலனையில் உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைக்காரர்கள் பயன் பெறும் வகையில் பரிசுத் திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அரசின் விரைவான அறிவிப்பு எதிர்பார்ப்பு

பொங்கலை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இந்த நிதி உதவி மற்றும் பரிசுத் தொகுப்புகள் குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

பொங்கல் திருநாளில் மக்களின் சுமைகளை குறைக்கும் வகையில் அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், தமிழக மக்களின் வாழ்வில் சிறப்பான நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு என்னென்ன? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000....? ரெடியா இருங்க....!