தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்பட போகுது!! பரபரப்பை ஏற்படுத்திய பெண் சாமியார்..
தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்பட்ட இருப்பதாக பெண் சாமியார் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர். திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக இவர் சமீபத்தில் திருவண்ணாமலை வந்திருந்தார். உதட்டு சாயம், முகத்தில் சாயம், தங்கநகை என சொகுசு காரில் வந்து இறங்கிய இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரி வலம் சென்றார்.
பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும் என்றும், 3 நாட்கள் முழு கடையடைப்பு இருக்கும் எனவும், பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.