கண்கலங்கவைக்கும் தமிழக கொரோனா மரணம்!! இன்றுமட்டும் எத்தனை பேர் பலி, எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

கண்கலங்கவைக்கும் தமிழக கொரோனா மரணம்!! இன்றுமட்டும் எத்தனை பேர் பலி, எவ்வளவு பாதிப்பு தெரியுமா?


Tamil Nadu may 6th corona update

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,898 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 24,898 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,97,500 ஆக உயர்ந்துள்ளது.

corona

அதிகபட்சமாக இன்று சென்னையில் 6,678 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 195 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 21,546 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,51,058 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.