அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தமிழகத்தில் இன்று ஏற்பட்ட கொரோனா மரணம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 1453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் புதிதாக 393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,79,046 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 13 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா மரணம் 11,694-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,430 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,56,279 ஆக உயர்ந்துள்ளது.