அரசியல் தமிழகம்

தமிழக மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறது! ஆவலுடன் தமிழக மக்கள்!

Summary:

Tamil Nadu budget filed today

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பேரவை தொடங்கியதும் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் தாக்கல் செய்யவுள்ளனர்.  தற்போதைய அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது என்பதால், புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கின்றன. 

 அடுத்தாண்டு மே மாதம், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், 2021 பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்ப்புற மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் முதலஅமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, நாளையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-வது ஆண்டு தொடங்குகிறது. எனவே, அதன் அடிப்படையிலும், புதிய சலுகைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மீதான விவாதத்தில், TNPSC குரூப் 4 முறைகேடு, குடியுரிமை சட்ட விவகாரம், உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement