தமிழகம்

அம்பானி குடும்பத்துல மட்டும் தான் இப்டி பண்ணுவாங்களா? நாங்களும் பண்ணுவோம்!. வியக்கவைத்த தமிழக தம்பதியினர்!.

Summary:

அம்பானி குடும்பத்துல மட்டும் தான் இப்டி பண்ணுவாங்களா? நாங்களும் பண்ணுவோம்!. வியக்கவைத்த தமிழக தம்பதியினர்!.


விருதுநகர் மாவட்டத்தில் பூக்களால் செய்யப்பட்ட மாலைக்கு பதிலாக பணமாலை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் புதுமணத்தம்பதியினர்.

விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில், நேற்று ரமேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. மணமேடையில் மணமகன், மணமகள் இருவரும் பூ மாலைக்கு பதிலாக, புதிய பத்து ரூபாயில் பின்னப்பட்ட பண மாலை அணிந்திருந்தனர்.

பணமாலையுடன் ஊர்வலமாக வந்த மணமக்களை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். கோடீஸ்வரர் இல்லாவிட்டாலும் அம்பானி குடும்பத்திற்கு நிகராக நாங்களும் திருமணம் செய்துகொண்டோம் என்ற எண்ணமும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் நிச்சயதார்த்த விழாவில், மேடை முதல் மண்டப அறைகள், தூண்களில் புதிய 2 ஆயிரம், 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பரவியது.

எங்களுக்கு மாலை மணம் வீசலைன்னாலும் பரவாயில்லை, மணமக்கள் என்றும் வாடாத மாலையணிந்து, எங்களுக்கு பண மாலையே போதும், பூவை விட இதுல செலவு குறைவு என கூறியுள்ளனர்.


Advertisement