தமிழகம் சினிமா

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய பிரபல தமிழ் நடிகை; வைரலாகும் புகைப்படங்கள்.!

Summary:

tamil cinima actors davayani - pongal celepration

நடிகை தேவயானி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியானதால் பலரும் அவரை  பாராட்டி வருகின்றனர்.

1990களின் மத்தியில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் 
நடிகை தேவையானி. 1994ஆம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், நினைத்தேன் வந்தாய் என்பன உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

actress devayani celebrates pongal festival with her family and her village people

டைரக்டர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜகுமாரனுக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள ஆலயங்கரடு கிராமம் தான் சொந்த ஊர். ராஜகுமார் மற்றும் தேவயானி இருவரும் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர். எனினும், மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊரில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், தேவயானி குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு பண்ணை வீட்டின் முன்பு மண் பானையில், பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார். அதோடு, கிராமத்தினருக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

தேவயானி மும்பையைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் இயக்குனரை மணந்து, முற்றிலும் தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். தமிழகத்தில் விவசாயம் அழிந்து வரும் நிலையில், ஒரு நடிகையாக விசாயத்தைத் நேசித்து வருவதை ஈரோடு மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 


Advertisement