தமிழகம் சினிமா Covid-19

கொரோனா பாதிப்பு.! பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மரணம்!

Summary:

tamil channel cameraman died by corona

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவுக்கு தமிழகத்தில் முதன்முதலாக ஒரு பத்திரிகையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி சேனலான ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். இவர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று (26-ம் தேதி) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மரணத்திற்கு பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு தமிழகத்தில் முதன்முதலாக ஒரு பத்திரிகையாளர் பலியாகியிருப்பது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய வைத்திருக்கிறது.


Advertisement