அரசு ஆபிஸ் தான் எங்களுக்கு பாரே போவியா.. சரக்கடிக்கும் அதிகாரி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

அரசு ஆபிஸ் தான் எங்களுக்கு பாரே போவியா.. சரக்கடிக்கும் அதிகாரி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!


Tambaram Pallavaram Govt Office Employee Drinks Liquor Alcohol at Office

சென்னை மாநகராட்சியில் இருந்து பிரிக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இதனால் தாம்பரம் மாநகர பகுதிகளில் உள்ள பணிகளை அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நிர்வாகத்தின் சார்பில் பல மக்கள் திட்ட பணிகளும், காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் சி பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தில் வைத்தே மதுபானம் அருந்துகிறார். மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் பிற ஊழியர்கள் இதுகுறித்து கேட்டால், அவர்களை நாக்கூசும் வார்த்தைகளால் கடிந்து வருவதாகவும் தெரியவருகிறது.

அரசு அலுவலகத்திற்கு சென்று வரும் பொதுமக்கள், அரசு அதிகாரியின் செயல்பாடுகளை கவனித்து இருந்தாலும், ஆட்சி நிர்வாக அதிகாரியை எதிர்த்து பேசினால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற எண்ணத்தில் கண்டுகொள்ளாமல், மனதில் குமுறலை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் வீடியோ வைரலாகி இருக்கிறது.