யாதவர் சமுதாய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு.. பாலசந்திர அழகுமுத்து தேவர் கைது.!

யாதவர் சமுதாய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு.. பாலசந்திர அழகுமுத்து தேவர் கைது.!


Tambaram MaraimalaiNagar Police Arrest Man FIR about Create Community Violence Abuse Speech

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில், சின்ன விஞ்சியம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன் (வயது 51). இவர் கடந்த 1 ஆம் தேதி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

"நான் யாதவர் சமூகத்தை சேர்ந்தவன். பாலசந்திரன் என்பவர் எனது சமுதாயம், சமுதாய பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசி, இருதரப்பு மோதலை ஏற்படுத்தும் விதமாக பதிவு அனுப்புகிறார். இந்த பதிவுகள் இருசமூகத்திடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக உள்ளன. அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Tambaram

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், ஜனார்தனனுக்கு வாட்ஸப்பில் பதிவு அனுப்பிய பாலச்சந்திரன் என்ற வீரபாலசந்திர அழகுமுத்து தேவர் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 8 ஆம் தேதி கூடுவாஞ்சேரியை சேர்ந்த இராதாகிருஷ்ணனும் பாலசந்திரன் மீது புகார் அளித்துள்ளார்.  

இராதாகிருஷ்ணனின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், பாலசந்திரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி வரை விஷயம் சென்றுள்ளது. இதனையடுத்து, மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், வடபழனியில் பதுங்கியிருந்த பாலசந்திரன் என்ற வீரபாலசந்திர அழகுமுத்து தேவரை காவல் துறையினர் கைது செய்தனர்.