புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம், குழந்தை.. சொந்த மகனை மூக்கு, வாய் பொத்தி கொன்ற கொடூர தந்தை..! தமிழகமே திடுக்கிடும் அதிர்ச்சி.!
வயது கோளாறில் காதலியுடன் நெருங்கி பழகிய காதலன் காதலியை அன்னையாக்கி, தனது பெற்றோரை எதிர்கொள்ள தாயாகி தனது சொந்த குழந்தையை 4 மாத பிஞ்சு என்றும் பாராது கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம், மணிமங்கலம் - காரனை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வருண். இவரின் மனைவி விஜயலட்சுமி. தம்பதிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் வருணின் பெற்றோருக்கு தெரியாது. திருமணத்திற்கு முன்பு காதல் ஜோடி நெருங்கி பழகியதால் விஜயலட்சுமி கர்ப்பமாகவே, விஜயலட்சுமியின் பெற்றோர் வருணை அழைத்து பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறக்கவே, பெற்றோருக்கு தெரியாமல் வருணும் குழந்தையை வளர்த்து வந்துள்ளார். மாமனார் ஆதரவுடன் இருந்து வந்த வருணுக்கு திடீரென அவரது குடும்பத்தாருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோருடன் செல்ல வருண் எண்ணியதாக தெரியவருகிறது.
மேலும், தனது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துவிட்டோம். குழந்தையும் பிறந்துவிட்டது. இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என எண்ணிய வருண், குழந்தையை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை வெளியில் அழைத்து சென்று வருவதாக வாய், மூக்கை பொத்தி கொலையும் நடந்துள்ளது.
கொலைக்கு பின்னர் குழந்தையின் உடலை படுக்கை விரிப்பில் சுற்றி சுடுகாட்டு புதரில் வீசிவிட்டு வந்துள்ளார். பின்னர், குழந்தை தனது தோழி கூடுவாஞ்சேரி மகாலட்சுமியின் வீட்டில் இருக்கிறது. எங்களின் வீட்டில் நமது காதலை சொல்லலாம். குழந்தை குறித்து ஏதும் கூறவேண்டாம். அவர்களை சமாதானம் செய்து குழந்தையை நம் வீட்டிற்கு அழைத்து வரலாம் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய விஜயலட்சுமியும் அமைதியாக இருக்க, அவரை அழைத்துக்கொண்டு பெற்றோரை பார்க்க சென்ற வருண் பெற்றோரிடம் காதலி என விஜயலட்சுமியை அறிமுகம் செய்து திருமணம் செய்ய பேசியுள்ளார். அவர்களும் வருண் - விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர், விஜயலட்சுமி குழந்தையை வாங்கி வர வருணிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
குழந்தை குறித்து வருண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்க, விஜயலட்சுமி கணவரின் தோழி மகாலட்சுமி வீட்டை கண்டறிந்து விசாரித்துள்ளர். அப்போது, 3 நாட்கள் மட்டுமே குழந்தை தன்னிடம் இருந்தது. பின்னர் வருண் அழைத்து சென்றுவிட்டார் என கூறவே, அதிர்ந்துபின் விஜயலட்சுமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வருணை கைது செய்து நடத்திய விசாரணையில், குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதியானது. சம்பவ இடத்தில் இருந்து குழந்தையின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் வருணை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.