வித்தியாசமான முறையில் திருமணம். தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?

வித்தியாசமான முறையில் திருமணம். தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?



suyamariyathai-kiraamam-in-vilupuram-district

பண்டைய காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் சுயமரியாதை திருமணங்கள்தான் நடைபெற்றது. பின்னர் அந்த பழக்கம் வெகுவாக மாறிவிட்டது.

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?
திருமணம் செய்யும் மணமகன் தான் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணிடமோ, அல்லது அந்த பெண் தனது வருங்கால கணவரிடமோ எந்த ஒரு வரதச்சனையும் எதிர்பார்க்காமல், மேலும் தெய்வங்களை சாட்சியாக வைக்காமல் மனிதர்கள் முன்பு செய்துகொள்ளும் திருமணமே சுய மரியாதை திருமணம் ஆகும்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கிராமங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைத் திருமணங்களே பெரும்பான்மையாக நடந்துவருகின்றன.vilupuram

மேல்மலையனூர் அருகிலுள்ள கோட்டைப்பூண்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட செக்கடி குப்பம், கோட்டுவன் குப்பம், அதியந்தல், கோவில்புறையூர் உள்ளிட்ட 10-கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் கருத்த்துக்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான சுயமரியாதை திருமணங்கள் சாத்திர, சம்பிரதாயங்களின்றி இந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக இந்த கிராமங்களில் பூஜை அரை இருப்பது இல்லை. சாமி படங்களுக்கு பதிலாக பெரியாரின் படங்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. சுயமரியாதை திருமணம் செய்துக்கொண்ட தம்பதிகள் குறைந்த செலவில் ஆடம்பரங்கள் இல்லாமல் எளிமையான முறையில் இந்தத் திருமணங்கள் நடக்கின்னறன. திருமணம் ஒப்பந்தத்தில் மணமக்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. வரதட்சணை பெறுவதை தவிர்க்க, மணமகனிடம் எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கப்படுகிறது.

சுயமரியாதைத் திருமணம் செய்த தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு தூயதமிழிலேயே பெயர் சூட்டி மகிழ்கின்றனர். சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டாலும் சிலர் பக்தர்களாக இருப்பதும் உண்டு. ஆனால் இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பூஜை அறை என்பதே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.