மனைவியின் நடத்தையில் சந்தேகம்; நண்பருடன் சேர்ந்து மனைவி வெட்டி கொன்ற கொடூரம்...!

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; நண்பருடன் சேர்ந்து மனைவி வெட்டி கொன்ற கொடூரம்...!


Suspicion of wife's behavior; The brutal murder of his wife along with his friend...!

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் மேலும் இரண்டு பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள செட்டிமல்லன்பட்டி உச்சிமகாளி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வேல்முருகன். இவரது மனைவி கற்பகவல்லி (28). இவர்கள் இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன், கற்பகவள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட ஆரம்பித்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று காலையில் மீண்டும் வேல்முருகன் கற்பகவல்லியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மறுபடியும் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் வெளியில் சென்றுள்ளார். பிறகு தனது நண்பரான ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டி சேர்ந்த, பண்டாரம் மகன் பிரேம்குமார் (21) என்பவரை அழைத்து வந்து, கற்பகவள்ளியின் வீட்டிற்கு சென்று அவரை, அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று கற்பகவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலையை செய்த வேல்முருகன் மற்றும் பிரேம்குமார் ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை காவல் துறையினர் கொலையாளிகளை காவல்துறை காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.