கணவரை பிரிந்து தாய் வீட்டில் இருந்த பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை! வெளியான திடுக்கிடும் தகவல்.

கணவரை பிரிந்து தாய் வீட்டில் இருந்த பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை! வெளியான திடுக்கிடும் தகவல்.Suside

இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த மனோகரன் - லதா தம்பதியினர். மனோகரன் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கோபித்து கொண்டு கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் லதா. இந்நிலையில் ஒரு நாள் வீட்டில் லதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை போலீசார் சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

suside

அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது லதா ஆட்டோவில் வேலைக்கு சென்று வந்த போது பரமசிவன் என்பவருடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அந்நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

இதனை பற்றி அறிந்த பரமசிவனின் மனைவி உறவினர்களுடன் வந்து லதாவை தகாத வார்த்தைகளால் தாறுமாறாக திட்டி சென்றுள்ளார். அதனை அடுத்து தான் லதா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்ற உண்மைகள் வெளியாகியுள்ளன.

அதனை அடுத்து போலீசார் பரமசிவனின் மனைவி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.