சினிமா

அடேங்கப்பா.. என்னவொரு எனர்ஜி! ஒரிஜினல் அயன் படத்தையே மிஞ்சிடுவாங்க போல! வீடியோவை பார்த்தா நீங்களே வாயடைச்சு போயிருவீங்க!

Summary:

நடிகர் சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார். இ

நடிகர் சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் சிலர் விதவிதமான ஹேஷ்டாக்குகள், வீடியோக்கள் போன்றவற்றை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவனந்தபுரம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அயன் படத்தில் வருவது போலவே பாடல் மற்றும் சண்டைக்காட்சியை அப்படியே தத்ரூபமாக நடித்து அதனை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது பார்ப்போர் அனைவரையும் பிரமிக்க வைத்தது. 

 இந்த வீடியோ வைரலான நிலையில் அதனைக் கண்ட சூர்யா அந்த இளைஞர்களின் திறமையை பாராட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து பாராட்டி அந்த இளைஞர்களுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது, மிகவும் அற்புதமான பணியை நீங்கள் செய்துள்ளீர்கள். அதனை நான் மிகவும் ரசித்தேன். அதை இவ்வளவு உயிர்ப்புடன் மீண்டும் உருவாக்கியதற்கு மிக்க நன்றி. அயன் படக்குழுவினர் அனைவரும் இதைப் பார்த்து ரசித்திருப்பார்கள்.

எந்தவித தொழில்நுட்ப கருவியும் இல்லாமல் மிகவும் அற்புதமாக இதை நீங்கள் செய்துள்ளீர்கள். பேரார்வம், பேரன்பு இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். யாராலும் அதைத் தடுக்க முடியாது என நிரூபித்துள்ளீர்கள். நீங்கள் கண்டிப்பாக சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.


Advertisement