ரஜினி கேட்டது ஒன்னு.. ஆனால் கிடைத்து ஒன்னும்.. ஆனாலும் செம ஹேப்பியில் ரஜினி ரசிகர்கள்..

ரஜினி கேட்டது ஒன்னு.. ஆனால் கிடைத்து ஒன்னும்.. ஆனாலும் செம ஹேப்பியில் ரஜினி ரசிகர்கள்..


Super star rajinikanth political entry latest update

நடிகர் ரஜினிகாந்த்  தனது புது அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், ரஜினிக்கு புது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்தநிலையில் , தனது அரசியல் வருகை குறித்து சமீபத்தில் உறுதி செய்தார் ரஜினி. அதுமட்டும் இல்லாமல் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவி, அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி என அடுத்தடுத்து அதிரடி காட்டிவருகிறார் ரஜினி.

rajini

இந்நிலையில் தனது அரசியல் வருகையின் அடுத்த நடவடிக்கையாக "மக்கள் சேவை கட்சி" என்ற பெயரில் ரஜினி தனது அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தனது கட்சியின் சின்னமாக பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்குமாறு ரஜினி கேட்டிருந்ததாகவும், ஆனால் பாபா முத்திரை சின்னம் மறுக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.