இளம் பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: திடீரென்று முளைத்த கள்ளக்காதலன் அதிரடி கைது..!

இளம் பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: திடீரென்று முளைத்த கள்ளக்காதலன் அதிரடி கைது..!


Sudden twist in the mysterious death of a young woman

ஈரோடு மாவட்டம், சித்தோடு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிருந்தா (23). இவரது கணவர் கார்த்தி (24). இவர் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே பிருந்தாவின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டதால், பிருந்தா தனது தாய் வீட்டிலேயே தனது காதல் கணவர் கார்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு கார்த்தி தனது தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். பிருந்தாவின் பெற்றோரும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக வீட்டில் தனியாக இருந்த பிருந்தா, கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக் கூறப்பட்ட நிலையில், உஷாரான காவல்துறையின,ர் கொலையாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த கொலை வழக்கில், திண்டுக்கல்லை சேர்ந்த அரவிந்த் (21) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், பிருந்தாவின் வீட்டிற்கு அருகில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வந்த போது அவருடன் அறிமுகம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் பிருந்தாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அரவிந்த் வேலை செய்து வந்ததால், அவரால் தொடர்ந்து பிருந்தாவை பார்க்க வரமுடியவில்லை. சம்பவத்தன்று பிருந்தா வீட்டில தனியாக இருப்பதை அறிந்த அடவிந்த் அங்கு வந்துள்ளார். அப்போது அவர் உன்னை பிரிந்து என்னால் உயிர் வாழ முடியவில்லை, இங்கிருந்து ஓடிவிடலாம் வா என்று பிருந்தாவிடம் கூறியதாக தெரிகிறது.

இதற்கு பதிலளித்த பிருந்தா நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். மேலும் வேறொருவருக்கு மனைவியாகவு இருக்கிறேன் எனவே என்னால் வரமுடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், பிருந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையிலடைத்தனர்.