காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்ட உதவி ஆய்வாளரின் பைக்கை ஆட்டையை போட்ட பலே திருடன்.!
காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்ட உதவி ஆய்வாளரின் பைக்கை ஆட்டையை போட்ட பலே திருடன்.!

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும்நிலையில், திருடர்களை பிடிக்க, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தனி ஆளாக திருடிய நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் செல்வகுமார் என்பவர் நேற்று முன்தினம் இரவு காவல்நிலையம் முன்பு அவரது இருச்சக்கரவாகனத்தை நிறுத்தியுள்ளார். பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தத்து.
இதனைப்பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் அதிர்ச்சி அடைந்தார். இரவு வேளையில் யாரோ ஒரு ஆசாமி அதை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தான் வேலை பார்க்கும் எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட போலீசாரின் இருசக்கர வாகனத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.