மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி!! ஜாக்டோ ஜியோவின் அதிரடி அறிவிப்பு!

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி!! ஜாக்டோ ஜியோவின் அதிரடி அறிவிப்பு!



students-and-parents-happy-for-teachers-protest-vapased

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு நிலையில், தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

jacto geo

மேலும் போராட்டத்தை தொடர்பவர்கள்  பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கை பிறப்பித்தது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் 96 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களும், தொடக்க பள்ளி ஆசிரியர்களில் 79 சதவீதம் பேரும் பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறியது. 

jacto geo

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எஞ்சிய ஆசிரியர்கள் நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்தது. 

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று நடைபெற்றது. அப்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், இன்று முதல் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.