பேருந்தில் பட்டா கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் செய்த சாகசம், இறுதியில் நேர்ந்த விபரீதம் .!

பேருந்தில் பட்டா கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் செய்த சாகசம், இறுதியில் நேர்ந்த விபரீதம் .!


student-travel-with-knife-in-bus

பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் கையில் பட்டா கத்தியை வைத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னை பிராட்வேயில் இருந்து காரனோடைக்குச் செல்லும் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர்  பட்டா கத்திகளை கையில் வைத்துகொண்டு பயணம் செய்தனர்.
 
மேலும் அவர்கள் பேருந்தில் படிக்கட்டில் நின்று கொண்டு கையில் வைத்திருந்த கத்தியை சுழற்றியும் ,சாலையில் உரசி தீ பிடிக்க வைத்தும் அச்சமுறுத்தினர்.மேலும் படிகளின் இருபுறமும் அவர்கள் அவ்வாறு நின்றதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானர்.

மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சென்னை மாநிலக் கல்லூரியை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற மாணவனை கைது செய்துள்ளனர்.

 மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.