வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
என் சாவுக்கு அவர்தான் காரணம்! தண்டனை கொடுங்க! கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய மாணவன்! வெளியான பகீர் சம்பவம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் வசித்து வந்தவர் சிங்கம். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். அவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவரது பள்ளி கணித ஆசிரியர் ரவி என்பவர் தனியாக டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த டியூசன் சென்டரில் கடந்த வருடம் பாலாஜி படித்துள்ளார். பின்னர் 10ம் வகுப்பு சென்றபின் அவரது டியூசனுக்கு செல்லாமல், வேறொரு டியூசனுக்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த ரவி பாலாஜியை வகுப்பில் எதாவது காரணத்தை கூறி அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியும் அவர்களும் பாலாஜியை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த பாலாஜி சமீபத்தில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று யாரிடமும் பேசாமலேயே இருந்துள்ளார். பின்னர் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் என்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணம், அவர் கொடுமை தாங்க முடியாமல் இம்முடிவை எடுத்துள்ளேன், அவருக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும், அனைவருக்கும் இறுதி வணக்கம் என எழுதியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.