குடிமகன்களுக்கு குஷியான செய்தி.! இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலையில் விற்கமுடியாது.! அதிரடி உத்தரவு.!
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பானங்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில், தமிழகம் முழுவதும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வருகிறது. புகார்கள் மீது உடனடியாக மாவட்ட மேலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகளில் 90 நாட்களுக்கு மேல் மது வகைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட மதுவகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அனைத்து வகை மதுபானங்களையும் விற்பனை செய்ய வேண்டும்.
மதுபானக் கடைகளை மாவட்ட மேலாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கடைகளை திறப்பதற்கு முன்பு மேலாளர்கள் உட்பட ஊழியர்கள் யார் யார் டாஸ்மாக் கடைகளில் இருக்கின்றனர் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். மதுக்கடைகளில் வெளிநபர்கள் யாரும் உள்ளே இருக்கக்கூடாது. டாஸ்மாக் கடைக்கு பணிக்கு வராத மேற்பார்வையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.