அரசியல் தமிழகம்

கொரோனாவை விட திமுகவை கண்டுதான் முதல்வர் அதிகம் அச்சப்படுகிறார்.! தடையை மீறி நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Summary:

stalin talk about admk

தடையை மீறி திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். 

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதுமுள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.  ஆனால், கொரோனா பரவல் காரணமாக, மாநிலம் முழுதும், இன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம் என, அரசு தரப்பில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தடையை மீறி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சியில், கிராமசபை கூட்டத்தை கூட்டினார். 

அந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்? கொரோனாவை விட திமுகவை கண்டுதான் முதல்வர் அதிகம் அச்சப்படுகிறார்.  அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? எனக்கேள்வி எழுப்பினார். 


Advertisement