
Special trains for deepavali 2019
பொங்கல், தீபாவளி என்றாலே சென்னையில் இருந்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிடுவார்கள். இதனால் பேருந்து, ரயில் என அனைத்தும் போக்குவரத்தும் பிஸியாகிவிடும். இந்நிலையில் இந்த மாதம் 27 ஆம் தேதி தீபவளி வருவதை ஒட்டி இப்போதில் இருந்தே ரயில், பேருந்து என அனைத்தும் புக்காகிவருகிறது.
குறிப்பாக ரயிலில் ஏற்கனவே அணைத்து டிக்கெட்டுகளும் புக்காகிவிட்ட நிலையில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 24-ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை வர நெல்லை - தாம்பரம் இடையே அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 29-ஆம் தேதி பிற்பகல் 12.55 மணிக்கு நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயிலும், தாம்பரம் - திருச்சி இடையே அக்டோபர் 30ந் தேதி காலை 6 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement