போய் வா அம்மா..! இறந்துபோன தாயின் சடலத்தை வீடியோ காலில் பார்த்து கதறிய ராணுவ வீரன் (மகன்)..! கண்கலங்க வைக்கும் சோக சம்பவம்.!



son-watching-mothers-funeral-through-video-call

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத ராணுவ வீரர் தனது தாயின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து விதமான போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், இறப்பு, இறுதி சடங்கு போன்ற நிகழ்வுகளில் கூட நெருங்கிய சொந்தங்கள் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி என்னும் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். ராணுவ வீரரான சக்திவேல் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். சக்திவேலுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் சக்திவேலின் பெற்றோருடன் சொந்த ஊரில் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் சக்திவேலின் தாயார் மாது கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் இறந்த செய்தியை அவருடைய தந்தை சக்திவேலிடம் தெரிவித்துள்ளார்.

தாய் இறந்த செய்தியை கேட்ட சக்திவேல் கதறி அழுதுள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் சக்திவேலால் ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவது என்பது சற்று கடினமான காரியம். இதனால் தாயின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்த சக்திவேல் கதறி அழுத காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.