தமிழகம் காதல் – உறவுகள்

மகனின் காதலியை திட்டமிட்டு சீரழித்த தந்தை! சற்றும் யோசிக்காமல் நள்ளிரவில் மகன் செய்த காரியத்தால் நெகிழ்ச்சி!

Summary:

son marry girl who sexually abused by father

நாகை மாவட்டம் வேதாரண்யம், செம்போடை கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பு நித்யானந்தம்.50 வயதுநிறைந்த அவர் துணிக்கடை மற்றும் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு 20 வயதில் முகேஷ் கண்ணன் என்ற  மகன் உள்ளார். இவர் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவர, பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மகன் வைத்திருந்த பெண்ணின் புகைபடங்களைப் பார்த்த தந்தை நித்யானந்தத்திற்கு அவர் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய அவர் பெண்ணை தொடர்புகொண்டு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். 

மேலும் கடந்த 27ம் தேதி இரவு  அந்த பெண்ணை தனது காரில் அழைத்துச் சென்ற நித்யானந்தம் தனது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு அந்த பெண்ணை மிரட்டி 3 நாட்கள் பாலியல் வன்முறை செய்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்து தப்பிய அந்த பெண்  வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து விசாரணைக்கு பிறகும் போலீசார் கருப்பு நித்யானந்தம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகியோரை கைது செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நித்யானந்தாவின் மகன், நான் காதலித்த பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்று கூறி, ஊர் மக்கள் முன் இரவில் திருமணம் செய்து கொண்டார்.


Advertisement