தமிழகம் காதல் – உறவுகள்

தந்தை சடலத்திற்கு முன் தனது காதலியை திருமணம் செய்துகொண்ட இளைஞன்!! கதறி அழுத உறவினர்கள்!!

Summary:

son marriage with lover infront of father deadbody

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள சிங்கனூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தெய்வமணி.இவரது மகன் அலெக்சாண்டர்.. இவர் மயிலம் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அலெக்ஸாண்டர் தன்னுடன் பணிபுரிந்து வந்த ஜெகதீஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

மேலும் இவர்களது காதல் விவகாரத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்களது திருமணம். அடுத்த மாதம் நடைபெற நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். 

    

இந்நிலையில் தனது தந்தையின் முன்தான் திருமணம் நடக்க வேண்டும் என விரும்பிய அலெக்சாண்டர் இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து தயங்கியவாறே பெண் வீட்டாருக்கு தெரிவித்துள்ளனர்.

மகனின் பாசத்தை புரிந்துகொண்ட அவர்கள் தனது மகள் ஜெகதீஸ்வரியை அழைத்துக்கொண்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு புதிய உடைகள் உடுத்தி தெய்வமணி கட்டிலில் அமர வைக்கப்பட்டிருந்தார். 

பின்னர் அவரது கைகளில் வைத்து ஆசிர்வாதம் வாங்கப்பட்ட தாலியை அலெக்ஸாண்டர் ஜெகதீஸ்வரி கழுத்தில் கட்டி திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது அலெக்ஸாண்டர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.a


Advertisement