மகன் கூட இருந்தும் கள்ளகாதலுடன் கொஞ்சி பேசிய தாய்.. ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன்..

மகன் கூட இருந்தும் கள்ளகாதலுடன் கொஞ்சி பேசிய தாய்.. ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன்..


son-killed-mother-who-had-illegal-relationship

கள்ளக்காதலை விட மறுத்த பெற்ற தாய்யை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வஞ்சி மலர். தற்போது 49 வயதாகும் இவர் திருமணம் முடிந்த மூன்று வருடங்களிலையே கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனது மகனுடன் தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில் இவற்கு தற்போது 19 வயதாகும் ஓம் சக்தி என்ற மகன் உள்ளார்.

ஓம் சக்தி கல்லூரி ஒன்றில் படித்துவரும்நிலையில், வஞ்சி மலர் அவ்வப்போது கேட்டரிங் வேலைக்கு சென்றுவந்துள்ளார். அந்தவகையில் வஞ்சிமலர் வேலைக்கு சென்றுவந்த இடத்தில் ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் வஞ்சிமலர் இரவு நேரங்களில் அடிக்கடி தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசிவந்துள்ளார். இந்த விவகாரம் வஞ்சிமலரின் மகன் ஓம் சக்திக்கு தெரியவர, அவர் இதுகுறித்து தனது தாய்யை கண்டித்துள்ளார். ஆனால் வஞ்சிமலர் அதை கேட்பதாக இல்லை. இப்படியே தொடர்ந்து நடந்துவந்தநிலையில் நேற்றிரவும் வஞ்சிமலர் வழக்கம் போல் தன் ஆண் நண்பருடன் போனில் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓம் சக்தி தனது தாயாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் வஞ்சிமலர் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தாயாரின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார் ஓம் சக்தி.

பின்னர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் சரணடைந்த அவர் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த வஞ்சி மலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஓம் சக்தியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

கள்ள காதல் சம்பவத்தால் பெற்ற தாய்யை மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.