புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தாயுடன் தகாத உறவு வைத்த கள்ளக்காதலன்.. மகன் செய்த கொடூர சம்பவம்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியானூர் செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நாகராஜன் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி தோட்டத்திற்கு சென்றனர். அங்கு செல்லும் வழியில் நாகராஜன் தலை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மோப்ப நாய் மற்றும் தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் புதுப்பேட்டையை சேர்ந்த தேவராஜ் மகன் சதீஷ் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் தனது தாய் ரத்னாவுடன் நாகராஜ் தகாத உறவு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை ரத்னாவின் மகன் கண்டித்துள்ளார்.
ஆனாலும், நாகராஜ் தனது தாயுடன் கள்ளக்காதலை தொடர்ந்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து சதீஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.