தமிழகம்

போதையின் உச்சம்: பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் மகன் செய்த கொடூரச்செயல்!

Summary:

son killed mom

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குளத்து முக்கு பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள். 70 வயது இவர், கணவரை இழந்த நிலையில் கூடையில் மீன்களை வைத்து தெருத்தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரி இல்லாததால் மீன் வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருடன் அவரது மகன் மாரியப்பன் என்பவரும் வீட்டில் ஒன்றாக இருந்து வருகிறார். மாரியப்பனுக்கு திருமணம் ஆன நிலையில், மனைவியை பிரிந்து சரியாக வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். 

குடிபோதைக்கு அடிமையான மாரியப்பன் தன தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மதுபோதையில், நேற்று உடல்நலம் சரியில்லாமல் வீட்டிலிருந்த தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் மாரியப்பன். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து, தன்னை பத்து மாதம் சுமந்து கஷ்ட்டப்பட்டு வளர்த்த தாய் என்று கூட பார்க்காமல் தாயின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாரியப்பன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய மாரியப்பனை கைது செய்தனர்.


Advertisement