கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
மாமனாரின் சடலத்தை பார்த்து கதறி அழுத மருமகள்.! விசாரணையில் அம்பாலான உண்மையால் அதிர்ந்துபோன கிராமத்தினர்.!

கணவனுடன் சேர்ந்து மாமனாரை கொலை செய்துவிட்டு இறுதி சடங்கின்போது கதறி அழுத மருமகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. முதியவரான இவர் கடந்த மாதம் 22ம் தேதி தனது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
தந்தை இறந்த தகவல் அறிந்த அவரது மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா ஆகியோர் இறந்தவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கொலையாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இறுதியில் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ள உண்மை அந்த பகுதி மக்களையே அதிரவைத்துள்ளது.
சொத்துக்காக முதியவர் ராசுவின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா இருவரும், தங்கள் கூட்டாளி அய்யனார் என்பவருடன் சேர்ந்துதான் முதியவர் ராசுவை கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொலையாளிகள் மூவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.