தமிழகம்

மது குடிக்க நண்பர்கள் பணம் தராததால் 29வது மாடியிலிருந்து குதித்த சாப்ட்வேர் என்ஜினீயர்!!

Summary:

software engineer suicide


ஆந்திரமாநிலம், முசிறி மாவட்டம், மடகு கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரராவ் (வயது 32). இவர் துரைப்பாக்கத்தில் தங்கி தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையானதால் வேலைக்கு சரியாக போகாமல் இருந்துள்ளார். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று, சோழிங்கநல்லுாரில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், நண்பரை பார்க்க சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அதே ஆட்டோவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். உறவினர்களும் இங்கு வரவேண்டாம் என கூறியதால் பின்னர் மறுபடியும் அதே ஆட்டோவில் நண்பன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். 

அங்கு ஆட்டோ டிரைவரிடம் கீழேயே இருக்க சொல்லிவிட்டு 26-வது மாடிக்கு சென்ற ஈஸ்வரராவ் அங்கிருந்து கீழே குதித்தார். சத்தம் கேட்டு காவலாளிகள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரராவ் இறந்து கிடந்தார் இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மது அருந்த பணம் கேட்டு தொல்லை கொடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மது அருந்த பணம் தராததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது.


Advertisement