அரசியல் தமிழகம் சினிமா

அரசியல் சாணக்கியர் கலைஞர் மடியில் வளர்ந்த நீங்கள்.. இதனை செய்ய வேண்டும்.! மு.க.ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்.!

Summary:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகுமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் இன்று பவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நடிகர் சிவக்குமார் வெளியிட்ட வீடியோவில், தமிழ் வழியில் படித்தால்தான் நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். 

அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். என வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement