சர்க்காருக்காக சண்டை போடுறத நிறுத்திட்டு, விவசாயியை காக்க துடிக்கும் இந்த நல்ல மனசை பாராட்டலாமே!

சர்க்காருக்காக சண்டை போடுறத நிறுத்திட்டு, விவசாயியை காக்க துடிக்கும் இந்த நல்ல மனசை பாராட்டலாமே!



sivakarthikeyan-meet-nel-jeyaraman

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இவர் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து  திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார்.

இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி 150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன். 

nel jeyaraman

ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்பார்கள். 

இவரது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் விருது மற்றும் தமிழக அரசின் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

              nel jeyaraman

இத்தகைய உன்னதமான பணிகளைச் செய்துவரும் ‘நெல்’ ஜெயராமன், தற்போது கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி போன்றவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

தன்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் பார்த்த சிவகார்த்திகேயனை நேரில் சந்திக்க விரும்பியதாக கத்துக்குட்டி படத்தின் இயக்குநர் சரவணனிடம் நெல் ஜெயராமல் கூறியிருக்கிறார்.



 

இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமனை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அப்போது, நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.