தமிழகம்

பள்ளி காதலன் குடிகாரன் ஆனதால் விலகிய காதலி... கயவனின் வெறிச்செயலால் பரபரப்பு..!

Summary:

பள்ளி காதலன் குடிகாரன் ஆனதால் விலகிய காதலி... கயவனின் வெறிச்செயலால் பரபரப்பு..!

காதலன் குடிக்கு அடிமையானதால், அவரை புறக்கணித்த மருத்துவ மாணவியின் வீட்டை, தனது நண்பர்களுடன் சேர்ந்து போதையில் இளைஞர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகாமையில் அதிகரை கிராமத்தில் ஒரு மாணவி, பள்ளிக்காலத்தில் லோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது பள்ளிக்கல்வி முடிந்ததும் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவிக்கு, லோகேஷ் தவறான நண்பர்களின் சேர்க்கையால் குடிக்கு அடிமையானது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவரை புறக்கணிக்க தொடங்கிய நிலையில், காதலை கைவிட்டுள்ளார். தொடர்ந்து தற்போது உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக மீண்டும் மாணவி ஊர் திரும்பியதையடுத்து, லோகேஷ் அவருக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இது மட்டுமின்றி இரவில் மாணவியின் பெற்றோருக்கு வெவ்வேறு எண்களில் இருந்து போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் கோபமுற்ற மாணவியின் பெற்றோர் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் அளித்துள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த இளைஞன் தனது நண்பர்களுடன் மதுபோதையில் மாணவியின் வீட்டை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement