#BigBreaking: சிவகங்கையில் பதற்றம்; இரயிலை நடுவழியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மறியல்..! 500 பேர் கைது.!

#BigBreaking: சிவகங்கையில் பதற்றம்; இரயிலை நடுவழியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மறியல்..! 500 பேர் கைது.!



Sivaganga Peoples Strike and Pull Emergency Chain on Train 

 

சிவகங்கை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிவகங்கை இரயில் நிலையத்தில் அவ்வழியே செல்லும் விரைவு இரயில்கள் நின்று செல்வது இல்லை. 

இதனால் காரைக்குடி, இராமநாதபுரத்தில் இறங்கி பயணிகள் சிவகங்கை நோக்கி வரும் சூழல் இருந்து வந்தது. இதனால் சிவகங்கை மக்கள் விரைவு இரயில்களை நிறுத்தி செல்ல தென்னக இரயில்வே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

சிவகங்கையில் ப. சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை மக்களவைக்கு தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள பலன் இல்லை. இவர்களில் ப. சிதம்பரம் மத்திய அமைச்சரவையில் முக்கிய துறையை நிர்வகித்தும் வந்துள்ளார். 

பொறுத்துப்பார்த்த மக்கள் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். சிவகங்கையில் இன்று ஒருநாள் முழு அடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, முந்தைய இரயில் நிலையத்திலேயே இரயில் ஏறிக்கொண்டு போராட்டக்காரர்கள், சிவகங்கை இரயில் நிலையம் வந்ததும் இரயிலின் அபாயசங்கிலியை பிடித்து இழுத்து இரயிலை நிறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். 

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இரயில் மறியல் சம்பவத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இரயில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.