அடமானம் வைத்த நகைகளின் அளவு குறைந்ததால் அதிர்ச்சி; இந்தியன் வங்கி பணியாளர்கள் மீது புகார்.!sivaganga-karaikudi-indian-bank-scam

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, நேமம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி கிளையில், நேமம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் ரூ.1.40 இலட்சம் மதிப்புக்கு நகைகளை அடங்கு வைத்துள்ளனர். மொத்தமாக 3 சவரன் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்துள்ளனர். 

வங்கி ஊழியர்கள் மீது புகார்

ஆனால், நகைகளை திருப்பும்போது நகைகள் நகையின் அளவு குறைந்துள்ளது. உடனடியாக அதனை வீடியோ எடுத்துக்கொண்டவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல, மற்றொரு பெண்ணின் கணவர் 4 சவரன் நகைகளை அடகு வைத்த நிலையில், அதனை திருப்பும்போதும் நகை அளவு குறைந்து இருக்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: 38 பேர் பலியான விஷசாராய விவகாரம்; பார்வை குறைபாடை சந்திக்கும் நோயாளிகள்.. கண்ணீரில் உறவினர்கள்.!

Indian Bank

இதனால் இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிறுகச்சிறுக சேமித்த நகைகளை அவசரத்திற்கு வங்கியில் அடகுவைத்தால், அவர்கள் நூதனமாக நகைகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து உயிர் பயம்; வீடு-வீடாக சோதனை நடத்தி 32 பேர் மீட்பு.. மருத்துவமனையில் அனுமதி.!