மஞ்சுவிரட்டை பார்க்க சென்ற பள்ளி மாணவர், மாடு முட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!

மஞ்சுவிரட்டை பார்க்க சென்ற பள்ளி மாணவர், மாடு முட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!


Sivaganga 11 th Class Student Died

நெற்குப்பை கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டை பார்க்க சென்ற பள்ளி மாணவர் மாடு முட்டி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், நெற்குப்பை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம்தோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடமும் நேற்று முன்தினத்தில் மஞ்சுவிரட்டு நடந்துள்ளது. 

மஞ்சுவிரட்டை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், கூட்டத்திற்குள் மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக புகுந்து சிலரை முட்டியுள்ளது. அப்போது, கொண்ணத்தான்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் பாலாஜியையும் (வயது 16) மாடு முட்டியுள்ளது. 

Sivaganga

இதனால் படுகாயமடைந்த பாலாஜியை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு, பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலாஜி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், நேற்று மதியம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.