அரசியல் தமிழகம் சினிமா

ரஜினி, விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன்; விவரம் உள்ளே

Summary:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித்தை தொடர்ந்து  சிவகார்த்திகேயன் சென்னை காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் திடீர் நலிவு ஏற்பட்டு மீண்டும் சீரானது.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தேசியக் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

sivakarthikeyan meets stalin க்கான பட முடிவு

இந்நிலையில் சிவகார்த்திகேயன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் உரையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


Advertisement