தமிழகம்

கவலைக்கிடமாக இருந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் தற்போதைய நிலை என்ன.? மருத்துவமனை மீண்டும் அறிக்கை.!

Summary:

Singer SPB health condition hospital latest report

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக பாடகர்  எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையிலும் தான் நலமாக இருப்பதாகவும், உடலநிலை சீராக இருப்பதாகவும் எஸ்.பி பாலசுப்ரமணியம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த தகவல் வைரலானதை அடுத்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்.பி. பி அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய தொடங்கினர். இந்நிலையில் இன்று வெளியான தகவலின்படி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில் "எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடர்ந்து உயிர் காக்கும் சாதனங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement