#Breaking: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.. ஒரே நாளில் ரூ.5,000 உயர்வு.. ரூ.2 இலட்சத்தை கடந்த வெள்ளி விலை.!



Silver Price Surges Beyond ₹2 Lakh Per Kg: Gold Also Rises Sharply by ₹160 per Sovereign

சென்னையில் சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோ ரூ.2 இலட்சத்தை கடந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை, தங்கத்தின் மீதான முதலீடு, சீனா தங்கத்தின் மீதான இறக்குமதியை அதிகரித்தது உட்பட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

உச்சத்தில் தங்கம் விலை:

சர்வதேச சந்தைகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் தங்கம் விலை ரூ.97,000 வரை சென்று பின் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த தங்கம், வெள்ளி விலையை ஒப்பிடும்போது தற்போது பல மடங்கு அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

Gold rate today

தங்கத்திற்கு டப் கொடுக்கும் வெள்ளி:

முன்னதாகவே தங்கத்தின் விலை ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை விலை உயரலாம் என நகை வியாபாரிகள் கூறிய நிலையில், அதனை உறுதி செய்யும் பொருட்டு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. தங்கத்துடன் போட்டி போட்டுகொண்டு வெள்ளி விளையும் விண்ணை முட்டும் அளவு உயருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை 19,000 உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் & வெள்ளி விலை (Gold Rate Today):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து , சவரன் ஆபரண தங்கம் ரூ.96,480க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.20 உயர்ந்து ரூ.12,060 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து  கிலோ வெள்ளி ரூ.2,01,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொங்கல் பண்டிகைக்கு கொலுசு கூட வாங்க முடியாத நிலை ஏற்படும் என மக்கள் குமுறி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!