கடைக்கு வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை உரிமையாளர்.! அலறியடித்து ஓடிய சிறுவன்.!

கடைக்கு வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை உரிமையாளர்.! அலறியடித்து ஓடிய சிறுவன்.!


shop keeper sexual torture to young boy

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் அபூபக்கர். 48 வயது நிரம்பிய இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 13 வயது சிறுவன், பொருட்கள் வாங்க சென்றுள்ளான். அப்போது அபூபக்கர், அந்த சிறுவனை கடைக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பதறிப்போன அந்த சிறுவன் அலறியடித்து கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடிவந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளான்.  இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அபூபக்கரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.