அதிர்ச்சி சம்பவம்... குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம்... போலீஸ் விசாரணை..!

அதிர்ச்சி சம்பவம்... குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம்... போலீஸ் விசாரணை..!


shocking-incident-dead-body-rotting-in-drinking-water-t

விருதாச்சலம் அருகே குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்ணெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதாச்சலம் ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்த மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் குடிநீரில் பயங்கர துர்நாற்றம் வீசுவதாக தொடர்ந்து புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து புகாரின் பேரில் குடிநீர் தொட்டியில் ஏறி அதிகாரிகள் பார்த்த போது அதில் இளைஞர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகள் விசாரித்த போது அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரன் என்பவரது மகன் சரவணகுமார் என்பதும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Water tank

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினரும் அழுகிய நிலையில் இருந்த சரவணகுமாரின் உடலை மீட்டு அரசு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சரவணகுமார் இறப்பிற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.